விழுப்புரம் அருகே பிடிவாரண்டு குற்றவாளி கைது
விழுப்புரம் அருகே பிடிவாரண்டு குற்றவாளி கைது
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம் காணை போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2004-ம் ஆண்டுகளில் நடந்த பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள மீனாட்சிபேட்டை பகுதியை சேர்ந்த பாஸ்கர்(வயது 55) என்பவரை காணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சில மாதங்களில் ஜாமீனில் வெளியே வந்த பாஸ்கர், கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து வழக்கு விசாரணைக்காக விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கடந்த 16.3.2018 அன்று விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டது. தலைமறைவான பாஸ்கரை கைது செய்து மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி காணை போலீசாருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி பாஸ்கரை பல்வேறு இடங்களில் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் பாஸ்கர், விழுப்புரம் பகுதியில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் காணை போலீசார் விரைந்து சென்று பாஸ்கரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story