நாமகிரிப்பேட்டையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி-1½ கிலோ ரூ.10-க்கு விற்பனை


நாமகிரிப்பேட்டையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி-1½ கிலோ ரூ.10-க்கு விற்பனை
x
தினத்தந்தி 11 March 2022 9:45 PM IST (Updated: 11 March 2022 9:45 PM IST)
t-max-icont-min-icon

நாமகிரிப்பேட்டையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர். இந்த தக்காளிகள் அறுவடை செய்யப்பட்டு, நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், வெளியூர் வியாபாரிகளும் வந்து, விவசாயிகளிடம் மொத்தமாக தக்காளிகளை வாங்கி செல்கின்றனர். தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி நேற்று 1½ கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story