திருச்செந்தூரில் இளம்பெண்ணிடம் 9 பவுன் சங்கிலி பறிப்பு


திருச்செந்தூரில் இளம்பெண்ணிடம் 9 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 11 March 2022 9:55 PM IST (Updated: 11 March 2022 9:55 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் அறையில் குளித்து கொண்டிருந்த இளம்பெண்ணிடம் 9 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்

திருச்செந்தூர்:
கோயம்புத்தூர் தெலுங்குபாளையம் நெடுஞ்செழியன் வீதியை சேர்ந்த கணேஷ் மனைவி திவ்யா (வயது 34). இவர் கடந்த 8-ந் தேதி மாலையில் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அவர் திருச்செந்தூர் கோவில் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். மறுநாள் அதிகாலை குளியல் அறையில் குளித்து கொண்டிருந்த போது, ஜன்னல் வழியாக மர்ம நபர் ஒருவர் அவர் கழுத்தில் கிடந்த 7½ பவுன் தாலி சங்கிலியையும், அதோடு கிடந்த 1½ பவுன் மற்றொரு சங்கிலியையும் ஆக மொத்தம் 9 பவுன் தங்க சங்கிலிகளை பறித்து சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
1 More update

Next Story