மராட்டிய சபாநாயகர் தேர்தல் இழுபறி கவர்னரை 3-வது தடவையாக சந்தித்த மந்திரிகள் குழு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 11 March 2022 10:11 PM IST (Updated: 11 March 2022 10:11 PM IST)
t-max-icont-min-icon

சபாநாயகர் தேர்தல் இழுபறி விவகாரத்தில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை மந்திரிகள் குழுவினர் 3-வது தடவையாக சந்தித்தனர். இதன் மூலம் தீர்வு ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை, 
சபாநாயகர் தேர்தல் இழுபறி விவகாரத்தில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை மந்திரிகள் குழுவினர் 3-வது தடவையாக சந்தித்தனர். இதன் மூலம் தீர்வு ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
சபாநாயகர் தேர்தல்
மராட்டிய சட்டசபை சபாநாயகராக இருந்த நானா படோலே கடந்த ஆண்டு காங்கிரஸ் தலைவராக பொறுப்பு ஏற்றதை அடுத்து தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். 
இதைதொடர்நது சபாநாயகர் பதவி காலியாக உள்ளது. இந்த நிலையில் கடந்த குளிர்கால கூட்டத்தொடரின்போது சபாநாயகர் தேர்தலுக்கான விதிகளில் மாற்றம் செய்து, ரகசிய வாக்கெடுப்பாக இருந்ததை, குரல் வாக்கெடுப்பாக மாற்ற அரசு முடிவு செய்தது. 
மேலும் சபாநாயகர் தேர்தல் நடத்த கவர்னரிடம் அனுமதி கோரியது. ஆனால் அவர் அனுமதி அளிக்காததால் தேர்தல் நடைபெற வில்லை. 
இந்த நிலையில் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் சபாநாயகர் தேர்தலை நடத்தி முடிக்கும் முனைப்புடன் மகா விகாஸ் அகாடி செயல்பட்டு வருகிறது. 
3-வது தடவையாக சந்திப்பு 
இதுகுறித்து ஆலோசனை நடத்த மகா விகாஸ் அரசின் மந்திரிகள் குழு  ராஜ்பவனில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்தனர். 
இந்த குழுவில் மந்திரிகள் சகன் புஜ்பால், ஏக்நாத் ஷிண்டே, ஹசன் முஷ்ரிப் மற்றும் விஜய் வடேடிவார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். சமீப நாட்களில் கவனருடன், மகா விகாஸ் அகாடி அரசின் மந்திரிகள் சந்திக்கும் 3-வது சந்திப்பு இதுவாகும். 
இந்த சந்திப்பின்போது நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டசபை சபாநாயகர் தேர்தல் நடத்த ஒப்புதல் அளிக்குமாறு மந்திரிகள் கோரிக்கை வைத்தனர். 
இதன் மூலம் சபாநாயகர் தேர்தல் இழுபறிக்கு தீர்வு ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. 

Next Story