தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்க வேண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் மனு


தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்க வேண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 11 March 2022 10:28 PM IST (Updated: 11 March 2022 10:28 PM IST)
t-max-icont-min-icon

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்க வேண்டும் எனறு தர்மபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

தர்மபுரி,:
தர்மபுரி மாவட்டம் வி.ஜெட்டிஅள்ளி கிராம மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் தர்மபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
தர்மபுரி ஊராட்சி ஒன்றியம் வி.ஜெட்டிஅள்ளி கிராமத்தில் ஏராளமான ஏழை மக்கள் உள்ளனர். இவர்கள் தினமும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் இந்த பகுதி மக்களுக்கு வேலை வழங்கி வந்தனர். தற்போது இத்திட்டத்தின் மூலம் வேலை வழங்கவில்லை. இதனால் இந்த கிராம மக்கள் வாழ்வாதாரத்திற்கான வேலை வாய்ப்பின்றி கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தில் இந்த கிராமத்தை சேர்ந்த ஏழை-எளிய மக்களுக்கு வேலை வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Next Story