தர்மபுரி மாவட்டத்தில் 12ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் முதன்மை நீதிபதி திலகம் தகவல்
தர்மபுரிமாவட்டத்தில் 12ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் என்று முதன்மை நீதிபதி திலகம் தெரிவித்தார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய தலைவர் திலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க ஏதுவாக தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படியும், சென்னை ஐக்கோர்ட்டு வழிகாட்டுதலின்படியும், தேசிய மக்கள் நீதிமன்றம் 12-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 4 தாலுகா நீதிமன்ற வளாகத்திலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இதில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ள கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வாராக் கடன் வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் மற்றும் சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்ற வழக்குகளுக்கு சமரச முறையில் அன்றைய தினமே தீர்வு காணப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி நீதிமன்றங்களில் நேரிலோ அல்லது வக்கீல் மூலமாகவோ ஆஜராகி நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்துகொள்ளக்கூடிய வழக்குகளில் சமரசம் செய்து வழக்கை முடித்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story