பாலக்கோடு அருகே வேன் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
பாலக்கோடு அருகே வேன் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே கோவிலூரான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது26). வேன் டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் இவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று முருகேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story