தர்மபுரியில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ10 கேட்டதாக கூறியவர் மீது தாக்குதல் தற்காலிக பணியாளர்கள் 5 பேர் மீது வழக்கு


தர்மபுரியில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக  ரூ10 கேட்டதாக கூறியவர் மீது தாக்குதல் தற்காலிக பணியாளர்கள் 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 March 2022 10:28 PM IST (Updated: 11 March 2022 10:28 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ10 கேட்டதாக கூறியவர் மீது தாக்குதல் நடத்திய தற்காலிக பணியாளர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தர்மபுரி:
தர்மபுரி ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்த தொழிலாளி மணிவேல் (வயது 32). இவர் தர்மபுரியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கினார். அப்போது அங்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட ரூ.10 கூடுதலாக கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் டாஸ்மாக் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி புகார் தெரிவித்தார். பின்னர் அந்த ஊழியரிடம் பேசுமாறு டாஸ்மாக் கடையில் இருந்தவர்களிடம் செல்போனை மணிவேல் கொடுத்தார். அப்போது செல்போனை வாங்கி பேச மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் இருந்தவர்களுக்கும் மணிவேலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த சிலர் அவரை தாக்கி மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக மணிவேல் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக அந்தப் பகுதியில் இருந்த தற்காலிக ஊழியர்கள் கணபதி (48), பெருமாள் (47), ஆடலரசு (43), ஜெயராமன் (45), செல்வம் (45) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story