தர்மபுரியில் விரிவுரையாளரின் வங்கி கணக்கில் ரூ75 ஆயிரம் நூதன மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை


தர்மபுரியில் விரிவுரையாளரின் வங்கி கணக்கில் ரூ75 ஆயிரம் நூதன மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 March 2022 10:28 PM IST (Updated: 11 March 2022 10:28 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் விரிவுரையாளரின் வங்கி கணக்கில் ரூ75 ஆயிரம் நூதன மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி:
தர்மபுரி நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் நேதாஜி. இவர் பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடைய செல்போன் எண்ணிற்கு வங்கி கணக்கு தொடர்பான விவரங்களை பதிவு செய்யுமாறு அறிமுகமில்லாத ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவருடைய வங்கி கணக்கு தொடர்பான விவரங்கள் இணையதள பக்கத்தில் தெரிந்துள்ளது. இதனால் நேதாஜி ஓ.டி.பி. எண்ணை அதில் பதிவு செய்துள்ளார். உடனடியாக அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.74 ஆயிரத்து 990 தொகையை மர்மநபர்கள் எடுத்து உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நேதாஜி இதுபற்றி தர்மபுரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் ரகுவரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த நூதன மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story