ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் தாமதம் மாற்றுத்திறனாளி பெண் தர்ணா போராட்டம் அரூர் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு


ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் தாமதம் மாற்றுத்திறனாளி பெண் தர்ணா போராட்டம் அரூர் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 11 March 2022 10:28 PM IST (Updated: 11 March 2022 10:28 PM IST)
t-max-icont-min-icon

ஆதார் அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்வதில் தாமதம் செய்வதாக கூறி மாற்றுத்திறனாளி பெண் அரூர் தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அரூர்:
ஆதார்  அட்டையில் முகவரி மாற்றம் செய்வதில் தாமதம் செய்வதாக கூறி மாற்றுத்திறனாளி பெண் அரூர் தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மாற்றுத்திறனாளி பெண்
தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் சபானா (வயது 40). மாற்றுத்திறனாளி. இவர் ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்ய தனது கணவருடன் அரூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தார். அங்கு முகவரி மாற்றம் செய்ய காலதாமதம் ஆனதாக தெரிகிறது. நீண்ட நேரமாக காத்திருந்தும் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்து தரவில்லை.
இதனால் சபானா அரூர் தாலுகா அலுவலக வளாகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வருவாய்த்துறை அலுவலர்கள் வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புறக்கணிப்பு
பின்னர் அவர் கூறுகையில், என்னுடைய ஆதார் அட்டையில் முகவரி மாற்றம்  செய்வதற்காக அரூர் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் மையத்திற்கு சென்றேன். அங்கு பணியில் இருந்த ஊழியர் டோக்கன் முடிந்துவிட்டது என்றும் மாலை வாருங்கள் என கூறியதால் மறுநாள் சென்றேன். அன்று பல மணி நேரம் காத்திருந்தும் அதில் மாற்றம் செய்து தரவில்லை. எனக்கு பின்னால் வந்த அனைவரும் ஆதார் அட்டையில் திருத்தம் செய்து சென்றனர். மாற்றுத்திறனாளியான என்னை அலைக்கழிப்பு செய்து ஊழியர்கள் புறக்கணிப்பு செய்தனர். இந்த பிரச்சினையை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என்று கூறினார்.

Next Story