குழந்தை திருமணம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை


குழந்தை திருமணம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை
x
தினத்தந்தி 11 March 2022 10:29 PM IST (Updated: 11 March 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாகப்பட்டினம்
நாகை மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது
குழந்தை திருமணம்
18 வயது பூர்த்தியடையாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். நாகை மாவட்டத்தில் குழந்தை திருமணம் அதிகமாக நடைபெற்று வருவதால், 18 வயது பூர்த்தியடையாத பெண் குழந்தைகளுக்கு திருமணம், நிச்சயதார்த்தம் நடத்த ஏதேனும் முயற்சி எடுத்தாலோ அதில் ஈடுபட்டாலோ தொடர்புடைய, அனைவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒத்துழைப்பு
நாகை மாவட்டத்தை குழந்தை திருமணமில்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு குழந்தைகளுக்கு நடத்தப்படும் திருமணத்தை தடுத்து நிறுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குழந்தை திருமணம் தொடர்பான புகார்களை சைல்டு லைன் 1098 மற்றும் பெண்கள் இலவச உதவி எண் 181-க்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் தகலுக்கு மாவட்ட சமூகநல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story