திருமருகல் ஒன்றியத்தில் நெல் மூட்டைகள் நனைந்து சேதம்


திருமருகல் ஒன்றியத்தில் நெல் மூட்டைகள் நனைந்து சேதம்
x
தினத்தந்தி 11 March 2022 10:34 PM IST (Updated: 11 March 2022 10:34 PM IST)
t-max-icont-min-icon

திருமருகல் ஒன்றியத்தில் நெல் மூட்டைகள் நனைந்து சேதம்

திட்டச்சேரி
திருமருகல் ஒன்றியத்தில்தொடர் மழையால் திறந்தவெளி கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்துள்ளதால் நிர்ணயித்த அளவை விட கூடுதல் ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பா, தாளடி சாகுபடி
திருமருகல் ஒன்றியத்தில் அம்பல், உத்தமசோழபுரம், கீழப்பூதனூர், திருச்செங்கட்டாங்குடி, கோட்டூர், திருமருகல், வடகரை, ராராந்திமங்கலம் ஊராட்சி பகுதிகளில் சம்பா  மற்றும் தாளடி சாகுபடி செய்யபட்டது. 
தற்போது அறுவடை பணி முடிந்து நெல்லை விற்பனை செய்ய   திறந்தவெளி நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தனர். 
நெல் நனைந்து சேதம்
இந்த நிலையில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால்  திறந்தவெளி கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த  நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்துள்ளன. இதனால் அரசு நிர்ணயித்துள்ள ஈரப்பதத்தை விட அதிகமான ஈரப்பதமாக  இருப்பதால் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
இதன் காரணமாக  விவசாயிகள் நெல்லை திரும்ப கொண்டு சென்று சாலையோரத்தில் கொட்டி காய வைத்து மீண்டும் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். 
செலவு அதிகமாகிறது
இவ்வாறு செய்வதால் செலவு அதிகமாகிறது என விவசாயிகள் வேதனை அடைகின்றனர். எனவே அரசு நிர்ணயித்த ஈரப்பதத்தை விட கூடுதலாக ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story