ரெயிலில் கடத்திய 8 கிலோ கஞ்சா, குட்கா பொட்டலங்கள் பறிமுதல்
ரெயிலில் கடத்திய 8 கிலோ கஞ்சா, குட்கா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
காட்பாடி
எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று மாலை 4 மணிக்கு வாலாஜாரோடு ெரயில் நிலையத்தில் சென்னை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதுசூதனன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமார், ஆனந்தன், ஏட்டு பாரதி அடங்கிய குழுவினர் ஏறி ஒவ்வொரு பெட்டிகளில் சோதனை செய்தனர்.
அப்போது கேட்பாரற்று பைகள் கிடந்ததை எடுத்துப் பார்த்தனர். அதில் கஞ்சா மற்றும் குட்கா பொட்டலங்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
மொத்தம் 8 கிலோ கஞ்சா மற்றும் குட்கா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதை கடத்தி வந்தவர்கள் யார் என தெரியவில்லை. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். இந்த கஞ்சா மற்றும் குட்கா பொட்டலங்களை சென்னை குற்றப்பிரிவு போலீசார் வேலூர் மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story