மத்திய அரசின் கொள்கையை கண்டித்து 28 மற்றும் 29ந் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தம்
மத்திய அரசின் கொள்கையை கண்டித்து 28 மற்றும் 29ந் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தம்
நாகப்பட்டினம்
மீன்பிடித் தொழிலுக்கு எதிரான மத்திய அரசின் கொள்கையை கண்டித்து 28,29-ந்தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என சி.ஐ.டி.யூ. ெதாழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மாநிலக்குழு கூட்டம்
நாகையில் தமிழ்நாடு மீன்பிடி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க கூட்டமைப்பு மாநிலக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு செயல் தலைவர் கருணாமூர்த்தி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாநில துணைப் பொதுச் செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் அந்தோணி கலந்து கொண்டு பேசினார். பொருளாளர் ஜெய்சங்கரன் வரவு செலவு அறிக்கையை சமர்பித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
வாழ்வாதாரம் பாதிப்பு
கடலையும், கடற்கரையையும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு தாரை வார்க்கும் தேசிய மீன்வளக்கொள்கையை முற்றிலும் கைவிட வேண்டும். மீன்பிடித் தொழிலையும், உள்நாட்டு மீனவர்கள் என ஒட்டுமொத்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் சாகர்மாலா, நீலப்புரட்சி பொருளாதாரம் என மீன்பிடி தொழிலுக்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகளை கைவிட வேண்டும்.
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களையும், மீன்பிடி உபகரணங்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். பொட்ரோல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும்.
நாடு தழுவிய வேலை நிறுத்தம்
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலுக்கு எதிராகவும் உள்ள மத்திய அரசின் கொள்கையை எதிர்த்து வருகிற 28-ந்தேதி(திங்கட்கிழமை) மற்றும் 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநில நிர்வாகிகள் ஜீவானந்தம், ராமு, அலெக்சாண்டர், சகாயபாபு, மனோகரன், விநாயகமூர்த்தி, நித்தியானந்தம், முகைதீன்அப்துல் காதர், சி.ஐ.டி.யூ. நாகை மாவட்ட செயலாளர் தங்கமணி, மீன்பிடி சங்க தலைவர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story