உடலில் கடப்பாரை பாய்ந்து தொழிலாளி சாவு


உடலில் கடப்பாரை பாய்ந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 11 March 2022 11:32 PM IST (Updated: 11 March 2022 11:32 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே மோட்டார்சைக்கிளில் எடுத்துச் சென்றபோது கடப்பாரை உடலில் பாய்ந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

தாராபுரம்
தாராபுரம் அருகே மோட்டார்சைக்கிளில் எடுத்துச் சென்றபோது கடப்பாரை உடலில் பாய்ந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தேங்காய் உரிக்கும் தொழிலாளி
தாராபுரம் அருகே உப்புத்துறை பாளையத்தைச் சேர்ந்த தன்னாசியப்பன் மகன் வீரமலை (வயது 42). தேங்காய் உரிக்கும் தொழிலாளி. இவர் நேற்று முன் தினம் தாராபுரம் அருகே கொங்கூர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தேங்காய் மட்டை உரிக்கும் வேலையில் ஈடுபட்டார்.
வேலை முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் கடப்பாரையை கட்டிக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கயிறு அறுந்து கடப்பாரை மோட்டார் சைக்கிளின் சக்கரத்தினுள் சிக்கியது. இதில் நிலை தடுமாறி மோட்டார்சைக்கிளுடன் வீரமலை கீழே விழுந்தார். 
பரிதாப சாவு
அப்போது கூர்மையாக இருந்த கடப்பாரை எதிர்பாராத விதமாக வீரமலையின் உடலில் ஆழமாக பாய்ந்தது. உடனே அவர் வலியால் சத்தம் போட்டார். இதனை அறிந்த சக தொழிலாளிகள் உடனடியாக, வீரமலை உடலில் பாய்ந்த கடப்பாரையை பிடுங்கினர்.
அப்போது ரத்தம் பீறிட்டு வந்தது. உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் கொண்டு செல்ல முயன்றபோது வீரமலை பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வீரமலைக்கு திருமணமாகி தேவிகா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

Next Story