அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்க வேண்டும்
நத்தக்காடையூர் நகர, சுற்றுவட்டார கிராம பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் உடனே திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
முத்தூர்
நத்தக்காடையூர் நகர, சுற்றுவட்டார கிராம பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் உடனே திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கீழ்பவானி பாசன கால்வாய்
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் நகர, சுற்றுவட்டார கிராம பகுதிகளில் நஞ்சை சம்பா நெல் அறுவடை பணிகள் கடந்த 2 வார காலமாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன்படி இப்பகுதி கீழ்பவானி பாசன பகுதி விவசாயிகள் அறுவடை செய்த நெல் மணிகளை எவ்வித இடைத்தரகு மின்றி விற்பனை செய்து பயன் அடைவதற்கு கடந்த காலங்களில் அதாவது ஒவ்வொரு ஆண்டும் நஞ்சை சம்பா நெல் அறுவடை பணிகள் காலகட்டங்களில் தமிழக அரசு, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் படி, தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் இப்பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்படும்.
இந்த நெல் கொள்முதல் மையங்களில் இப்பகுதி விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல்மணிகள் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம் ஆகும்.
நெல் கொள்முதல் மையங்கள்
ஆனால் இந்த ஆண்டு இப்பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நத்தக்காடையூர் நகர, சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இதுவரை அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் புதிதாக திறக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள் அறுவடை செய்த நெல் மணிகளை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள 3 அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு கனரக வாகனங்களில் நேரில் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் இப்பகுதி கீழ்பவானி பாசன விவசாயிகளுக்கு கூடுதல் போக்குவரத்து செலவும், கூடுதல் நேரம், கால விரயம் ஏற்பட்டு வருகிறது. மேலும் தனியார் நெல் வியாபாரிகள் இப்பகுதி விவசாயிகளிடம் நஞ்சை சம்பா நெல் மணிகளை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்ய முன் வருகின்றனர்.
துரித நடவடிக்கை
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு தமிழக அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நத்தக்காடையூர் நகர சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த காலங்களில் புதிதாக திறக்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் போல் இந்த ஆண்டும் இப்பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் உடனடியாக திறக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கீழ்பவானி பாசன நஞ்சை சம்பா நெல் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story