மகாமாரியம்மன் கோவில் பாடைக் காவடி திருவிழா


மகாமாரியம்மன் கோவில் பாடைக் காவடி திருவிழா
x
தினத்தந்தி 11 March 2022 11:58 PM IST (Updated: 11 March 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

வலங்கைமானில் மகாமாரியம்மன் கோவில் பாடைக் காவடி திருவிழா பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

வலங்கைமான்;
வலங்கைமானில் மகாமாரியம்மன் கோவில் பாடைக் காவடி திருவிழா பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
மகாமாரியம்மன் கோவில் 
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பிரசித்தி பெற்ற  மகாமாரியம்மன் கோவில் உள்ளது. பாடைக்கட்டி மகா மாரியம்மன் என அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். மாங்கல்யம், குழந்தைவரம், உயிர் காக்கும் அம்மனாக போற்றப்படும் இக்கோவில் சக்தி தலமாகவும் அழைக்கப்படுகிறது. நேற்று இந்த கோவிலில் இந்த ஆண்டுக்கான பாடைக்காவடி திருவிழா பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 
பாடைக்காவடி திருவிழா 
வருகிற 27 -ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) பாடைக் காவடி திருவிழா நடக்கிறது. முன்னதாக மகா மாரியம்மன் சப்பரம் தயார் செய்யப்பட்டு, மின்னொளி அலங்காரத்தில் மங்கள வாத்திய இசை நிகழ்ச்சியுடன் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு வடக்கு அக்ரகாரம் கடைத்தெரு கும்பகோணம் ரோடு வழியாக வீதிஉலா நடைபெற்று  திருவிழா தொடங்கியது.
திரளான பக்தர்கள்
வருகி்ற 13-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முதல் காப்புக்கட்டுதலும், 20-ந் தேதி 2-ம் காப்பு கட்டுதலும் நடத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து கண்ணகி அம்மன் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகளுடன் வலங்கைமான் நகரின் முக்கிய வீதிகளில் வீதிஉலா காட்சி நடைபெறும். இதற்கான  ஏற்பாடுகளை திருவாரூர் உதவி ஆணையர் ஹரிஹரன் தலைமையில் மகாமாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் ஆய்வாளர் ரமணி ஆகியோர் முன்னிலையில் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 27-ந் தேதி நடைபெறும் பாடைக்காவடி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story