கொரோனா தொற்று இல்லாத குமரி மாவட்டம்


கொரோனா தொற்று இல்லாத குமரி மாவட்டம்
x
தினத்தந்தி 12 March 2022 12:05 AM IST (Updated: 12 March 2022 12:05 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு பூஜ்யம் ஆனது. அதே சமயம் முக கவசம் அணிவது மக்களிடையே குறைந்து வருகிறது.

நாகர்கோவில்: 
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு பூஜ்யம் ஆனது. அதே சமயம் முக கவசம் அணிவது மக்களிடையே குறைந்து வருகிறது.
கொரோனா பாதிப்பு 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் குமரி மாவட்டமும் ஒன்றாகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா ஒரு நாளைய பாதிப்பு 1500 வரை சென்றது. பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 50-க்குள்ளாக இருந்தது. 
அதன்பிறகு மேலும், மேலும் குறைந்து கொண்டே வந்தது. இதனால் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்திலேயே இருந்து வந்தது. குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,890 ஆக இருந்தது. கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மட்டும் 19 ஆயிரத்து 374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று இல்லாத மாவட்டம்
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1482 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. 
இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பூஜ்ஜியமாக மாறியுள்ளது. எனவே கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக குமரி மாறியுள்ளது.
முக கவசம்
கொரோனாவின் தாக்கம் குறைந்ததால் மக்கள் தற்போது முக கவசம் அணிவது குறைந்துள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றுவதிலும் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. மேலும் தடுப்பூசி போடுவதிலும் மக்களுக்கு ஆர்வம் குறைந்துள்ளது. எனவே மக்கள் கொரோனா இல்லை என எண்ண வேண்டாம். அதனால் கொரோனா கால கட்டுப்பாடுகளை தொடர்ந்து மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும், முக கவசம் அணிதல், கைகளை நன்றாக சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story