மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 பேர் படுகாயம்
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
அரவக்குறிச்சி,
அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி வேலம்பாடியை சோர்ந்தவர் பசுபதி (வயது 31), கூலி தொழிலாளி. இவர் பள்ளப்பட்டி-பழனி ரோடு இச்சிப்பட்டி பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது ஒட்டன்சத்திரத்திலிருந்து எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பசுபதியை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு ஒட்டன்சத்திரத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதேபோல் காரை ஓட்டி வந்த அரவக்குறிச்சியை அடுத்த நாகம்பள்ளியை சேர்ந்த பரமசிவம் (54) படுகாயத்துடன் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story