வெள்ளை கோட் அணிந்து முதலாம் ஆண்டு மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு


வெள்ளை கோட் அணிந்து முதலாம் ஆண்டு  மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 12 March 2022 12:14 AM IST (Updated: 12 March 2022 12:14 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் வெள்ளை கோட் அணிந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் வெள்ளை கோட் அணிந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

புதிய மருத்துவ கல்லூரி

ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவ கல்லூரி பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. 
100 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டு கடந்த ஜனவரி 13-ந் தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியது. இந்த நிலையில் முதல்கட்டமாக தற்போது வரை மாநில ஒதுக்கீட்டில் 85 இடங்களும் பூர்த்தியாகி மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 
இதுதவிர அகில இந்திய ஒதுக்கீட்டில் 15 இடங்களில் மாணவர்கள் சேர்ந்து வருகி ன்றனர். 
முதலாம் ஆண்டுக்கான பாட வகுப்புகள் அந்தந்த பேராசிரியர்கள் மூலம் தொடங்கி நடந்து வருகிறது. மாணவர்களுக்கு விசாலமான அறைகள், பாதுகாப்பு பெட்டக வசதிகள், வகுப்பறைகள் என அனைத்து அம்சங்களும் அமைந்துள்ளன. இந்த நிலையில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கல்வி கற்று வருகின்றனர்.

வெள்ளை கோட் அணிவிக்கும் நிகழ்ச்சி

முதலாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவர்களுக்கான வெள்ளை கோட் அணிவிக்கும் நிகழ்ச்சி என்பது மருத்துவ கல்லூரி கல்வி நடவடிக்கையில் மிகவும் முக்கிய தருணமாகும். 
அந்த சீருடை அணிந்து டாக்டரை போல வலம் வருவதற்காகத்தான் உயர்கல்வியில் கஷ்டப்பட்டு கல்வி கற்பதை லட்சிய கடமையாக கொண்டு மாணவர்கள் செயல்படுவார்கள்.
 அந்த வகையில் மருத்துவ கல்லூரியில் முதல்முறையாக வெள்ளை கோட் அணிவிக்கும் நிகழ்ச்சி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று நடைபெற்றது. 
மருத்துவ கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு முதல்வர் டாக்டர்.அல்லி தலைமை தாங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர். மலர்வண்ணன், மருத்துவ அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, உதவி மருத்துவ அலுவலர் மனோஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகளுக்கு வெள்ளை கோட் அணிவித்து டாக்டர் ஆகும் மருத்துவ கல்வி பணியில் முதல்படியை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதில், அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story