மாணவிக்கு பாலியல் தொல்லை; அரசுப்பள்ளி ஆசிரியர் கைது


மாணவிக்கு பாலியல் தொல்லை; அரசுப்பள்ளி ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 12 March 2022 12:22 AM IST (Updated: 12 March 2022 12:22 AM IST)
t-max-icont-min-icon

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கமுதி

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பாலியல் தொந்தரவு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அபிராமம் பச்சேரியை சேர்ந்தவர் ஆதிமுத்துச்செல்வன்(வயது 43). இவர் ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் 4-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஆதிமுத்துச்செல்வன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதோடு இது பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என அவர் மாணவியை மிரட்டியதாகவும் ெதரிகிறது.

ஆசிரியர் கைது

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவி இதுபற்றி தனது தாயாரிடம் தெரிவித்தார்
பின்னர் மாணவியின் தாயார், அபிராமம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் அபிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி விசாரணை நடத்தி, ஆசிரியர் ஆதிமுத்துச்செல்வனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.

Next Story