300 கிலோ பூக்களால் பட்டத்தரசி அம்மனுக்கு அலங்காரம்


300 கிலோ பூக்களால் பட்டத்தரசி அம்மனுக்கு அலங்காரம்
x
தினத்தந்தி 12 March 2022 12:25 AM IST (Updated: 12 March 2022 12:26 AM IST)
t-max-icont-min-icon

300 கிலோ பூக்களால் பட்டத்தரசி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது

சிங்கம்புணரி, 

 சிங்கம்புணரி அருகே உள்ள கண்ணமங்கலத்தில் பட்டத்தரசி அம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று முன்தினம் இரவு பூத்தட்டு எடுத்து வரும் நிகழ்ச்சியுடன் ெதாடங்கியது. ஊரின் மையப்பகுதியில் இருந்து சுமார் 220 பூத்தட்டுகள் சுமந்த பெண்கள் வரிசையாக வலம் வந்து கோவிலை அடைந்தனர். அங்கு பெண்கள் கொண்டு வந்த பூத்தட்டுகளை அம்பாளுக்கு பூக்களால் அபிஷேகம் செய்தனர். சுமார் 300 கிலோ எடை கொண்ட பூக்களால் 5 அடி உயரம் கொண்ட பட்டத்தரசி அம்மன் சிலைக்கு மலைபோல் பூக்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. சுமங்கலி பெண்கள் திருமணம் வரம் வேண்டுபவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் அனைவரும் அம்மனுக்கு பூஜித்த மலர்களை பெற்று தங்கள் பூஜை அறையில் வைத்து பூஜித்தனர். இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
 திருவிழாவில் 18-ந்தேதி காலை 9 மணிக்கு பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் மாலையில் கோவில் முன்பு பிரமாண்ட பந்தலில் பெண்கள் பங்குனி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்படும்.19-ந்தேதி காப்பு இறக்குதல் நிகழ்ச்சியுட் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஐந்து நிலை நாடு மூன்றாவது மங்கலம் கண்ணமங்கலம் கிராமத்தார்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Next Story