கருப்பணசாமி ேகாவிலில் மாசிக்களரி உற்சவ திருவிழா


கருப்பணசாமி ேகாவிலில் மாசிக்களரி உற்சவ திருவிழா
x
தினத்தந்தி 12 March 2022 12:49 AM IST (Updated: 12 March 2022 12:49 AM IST)
t-max-icont-min-icon

திருச்சுழி அருகே கருப்பணசாமி ேகாவிலில் நடைபெற்ற மாசிக்களரி உற்சவ திருவிழாவில் கொதிக்கும் நெய்யில் பெண்கள் கையால் அப்பம் சுட்டனர்.

காரியாபட்டி, 
திருச்சுழி அருகே கருப்பணசாமி ேகாவிலில் நடைபெற்ற  மாசிக்களரி உற்சவ திருவிழாவில் கொதிக்கும் நெய்யில் பெண்கள் கையால் அப்பம் சுட்டனர். 
களரி திருவிழா 
 திருச்சுழி அருகே உள்ள புலியாண்டார்கோட்டை கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீமாரநாடு கருப்பணசாமி ேகாவிலில் மாசிக்களரி உற்சவ திருவிழா நடைபெற்றது. 
மாசிக்களரி உற்சவ திருவிழாைவ முன்னிட்டு ஊருக்குள் அமைந்திருக்கும் ஸ்ரீமந்தையம்மன் ேகாவிலின் பீடத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி, 21 கண் அக்னிசட்டி ஆகியவை எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் நிகழ்வு நடைபெற்றது.
நேர்த்திக்கடன் 
 இந்தநிகழ்வின் போது  விரதம் இருந்த பக்தர்கள் கொதிக்கும் நெய்யை கையால் அள்ளி கூடியிருக்கும் பக்தர்களின் முகத்தில் பூசியும், கை கால்களில் தெளித்தும், சுடும் நெய்யில் கையால் அப்பத்தை எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். விழாவில் நல்லுக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் கர்ணன் மற்றும் கிராம மக்கள் திரளான பேர் கலந்து கொண்டு ஸ்ரீமாரநாடு கருப்பணசாமியை தரிசனம் செய்தனர்.

Next Story