பல்கலைக்கழக மாணவர்கள் 62 பேர் ரத்ததானம்


பல்கலைக்கழக மாணவர்கள் 62 பேர் ரத்ததானம்
x
தினத்தந்தி 12 March 2022 12:57 AM IST (Updated: 12 March 2022 12:57 AM IST)
t-max-icont-min-icon

பல்கலைக்கழக மாணவர்கள் 62 பேர் ரத்ததானம்

மணிகண்டம், மார்ச்.12-
பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட அலகின் சார்பில் ரத்த தான முகாம் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது. முகாமை பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் முகாமை தொடங்கி வைத்தார். பதிவாளர்  கணேசன், ஆட்சிக்குழு உறுப்பினர் சேகர், பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் இலக்குமிபிரபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் வளர்மதி தலைமையிலான குழுவினர் ரத்ததானம் பெற்றனர். இதில் பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த 62 நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் ் பங்கேற்று ரத்த தானம் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மாசிலாமணி செய்திருந்தார்.

Next Story