வத்திராயிருப்பில் சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பியால் பரபரப்பு


வத்திராயிருப்பில் சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பியால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 March 2022 1:07 AM IST (Updated: 12 March 2022 1:07 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பில் சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பியால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வத்திராயிருப்பு. 
வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதி வழியாக தினமும் எண்ணற்ற பேர் சென்று வருகின்றனர். இந்தநிலையில் நேற்று வத்திராயிருப்பு தாலுகா பகுதியில்  காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. பின்னர் மாலை 5.30 மணிக்கு மின்சாரம் கொடுக்கப்பட்டது. இந்தநிலையில் முத்தாலம்மன் பஜாரில் இருந்து கூமாபட்டி செல்லும் சாலையில் உள்ள வளைவு பகுதியில்  மின் வயர் ஒன்று திடீரென அறுந்து விழுந்தது. இதுகுறித்து உடனடியாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வத்திராயிருப்பு மின் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. பின்னர் மின் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து அறுந்து கிடந்த மின் வயரை  சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். கம்பி அறுந்து விழுந்த நேரத்தில் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களின் நடமாட்டம் மற்றும் பொது மக்களின் நடமாட்டம் இல்லாததால் பெரும் அசம்பாவிதம்  தவிர்க்கப்பட்டது. 

Next Story