மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; விவசாயி பலி
தென்னிலை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
க.பரமத்தி,
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
கரூர் மாவட்டம், தென்னிலை அருகே அஞ்சூர் பாண்டிலிங்கபுரத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 33), விவசாயி. இவர் பாண்டிலிங்கபுரத்திலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் கொளந்தாபாளையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அஞ்சூர் பில்லாபாளையத்தை சேர்ந்த கூலிதொழிலாளி ஆறுமுகம் (49) என்பவர் கொடுமுடியில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.கொளந்தாபாளையம் மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது.
விவசாயி பலி
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக் டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதேபோல் படுகாயம் அடைந்த செந்திலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி செந்தில் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story