ராஜபாளையம் யூனியன் அலுவலகம் முற்றுகை


ராஜபாளையம் யூனியன் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 12 March 2022 1:15 AM IST (Updated: 12 March 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி ராஜபாளையம் யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

ராஜபாளையம்,
அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி ராஜபாளையம் யூனியன் அலுவலகத்தை      பெண்கள் முற்றுகையிட்டனர். 
சுகாதார வளாகம் 
ராஜபாளையம் ஒன்றியத்தில் உள்ள மேலப்பாட்டம் கரிசல் ஊராட்சிக்கு உட்பட்டது அம்பேத்கர் நகர். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இ்ந்த பகுதியில்  இதுவரை மகளிர் சுகாதார வளாகம் கட்டப்படவில்லை. இதற்கான இடத்தை அப் பகுதி மக்கள் தேர்வு செய்து கொடுத்தும், கட்டிடம் கட்டுவதற்கான நிதியை அரசு வழங்கிய நிலையிலும் சுகாதார வளாகம் கட்டும் பணிகள் இது வரை தொடங்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
மேலும் இங்கிருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வழியின்றி அப்பகுதியிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. 
அலுவலகம் முற்றுகை 
இதுகுறித்து பல முறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 
எனவே தங்களுக்கு தேவையான குடிநீர், சாலை, தெரு விளக்கு, ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கோரிக்கை விடுத்தனர். 
அவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்த குமார், மாவட்ட கவுன்சிலர் நிதியின் மூலம் மகளிர் சுகாதார வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். 
இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story