ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்:கிராம மக்கள் சாலை மறியல்
ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்கியதால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
மானாமதுரை,
மானாமதுரை அருகே உள்ள வாகுடி கிராம ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் மாயாண்டி சாமி. இந்நிலையில் வாகுடி நிலத்தில் உள்ள முட்மரங்களை சின்ன ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த சிலர் வெட்டியதாக கூறப்படுகிறது.இதனை வாகுடி ஊராட்சி மன்றத் தலைவர் மாயாண்டி சாமி தட்டி கேட்ட போது அவருக்கும், சின்ன ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் சின்ன ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த சிலர் வாகுடி ஊராட்சி மன்றத் தலைவர் மாயாண்டிசாமியை கம்பியால் தாக்கியுள்ளனர்.இதில் காயமடைந்த மாயாண்டிசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வாகுடி கிராம மக்கள் மதுரை -ராமேஸ்வரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மானாமதுரை துணை சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.
Related Tags :
Next Story