போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற வாகனங்களை ஒழுங்கு படுத்தும் பணி


போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற வாகனங்களை ஒழுங்கு படுத்தும் பணி
x
தினத்தந்தி 12 March 2022 1:41 AM IST (Updated: 12 March 2022 1:41 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற வாகனங்களை போலீசார் ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்:
கும்பகோணத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற வாகனங்களை போலீசார் ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 
போக்குவரத்து நெரிசல்
கும்பகோணம் நீடாமங்கலம் சாலை மற்றும் இளங்கோ நகர், குட்செட் ரோடு, கஸ்தூரிபா ரோடு, காரைக்கால் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சரக்குகளை ஏற்றிவரும் லாரிகள் சாலையின் இருபுறமும் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது. . இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெருக்கடியால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகளும் கடும் அவதி அடைந்து வந்தனர். இதனால் பெரும் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருந்தது. இந்தப்பகுதியில் நிறுத்தப்படும் சரக்கு லாரிகளை வேறு இடங்களில் நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். 
போலீசார் நடவடிக்கை 
இதுகுறித்து புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிெராலியாக போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் சரக்கு லாரிகளை வேறு இடத்தில் நிறுத்துவதற்காக போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி சரக்குகளுடன் வரும் வாகனங்களை சாக்கோட்டை, அம்மாசத்திரம் பைபாஸ் சாலையில் இடதுபுறம் மட்டும் வரிசையாக நிறுத்த வேண்டும். சரக்குகளை கையாளவும், எடை போடுவதற்காகவும் 10 வாகனங்கள் வீதம் நுகர்பொருள் வாணிப கிடங்கு மற்றும் ரெயில்வே குட்ஷெட் பகுதிகளில் அனுமதிக்கவேண்டும். 10 வாகனங்கள் திரும்பிய பின்னர் அடுத்த 10 வாகனங்களை அனுமதிக்க வேண்டும். 
எச்சரிக்கை 
இதன் மூலம் போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் பாதுகாக்க முடியும் என போக்குவரத்து போலீசார் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியுள்ளனர். இதை மீறி போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் சரக்கு லாரிகளின் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Next Story