மினி லாரி மோதி 6 ஆடுகள் சாவு
மதுக்கூர் அருகே மினி லாரி மோதி 6 ஆடுகள் இறந்தன. தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மதுக்கூர்:
மதுக்கூர் அருகே மினி லாரி மோதி 6 ஆடுகள் இறந்தன. தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
ஆடு வளர்க்கும் தொழில்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா சாளுவன் விடுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். தற்போது இவர் பட்டுக்கோட்டை பகுதியில் ஆட்டை மேய்ச்சலுக்கு விட்டு தொழில் செய்து வருகிறார்.
நேற்றுமுன்தினம் இரவு பட்டுக்கோட்டை அருகே உள்ள மேட்டுவயல் கிராமத்தில் இருந்து மதுக்கூர் அருகே உள்ள பெரியக்கோட்டை கிராமத்திற்கு தன்னுடன் வேலைபார்க்கும் ஆட்களுடன் ஆடு்களை ஓட்டி வந்தார்.
6 ஆடுகள் சாவு
நேற்று அதிகாலை 4 மணியளவில் மதுக்கூர் பெரியக்கோட்டை சாலையில் சிராங்குடி அருகே வந்தபோது, எதிரே வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக மாணிக்கம் ஓட்டிச்சென்ற ஆடுகள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 ஆடுகள் இறந்தன. மேலும் 4 ஆடுகள் காயமடைந்தன. விபத்தை ஏற்படுத்திய மினி லாரி டிரைவர் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து மாணிக்கம் மதுக்கூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story