கள்ளப்பட்டி பகுதியில் இன்று மின் நிறுத்தம்
கள்ளப்பட்டி பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;-
கை.களத்தூர் துணை மின் நிலையத்திற்கு உயர் மின் கோபுரம் அமைக்க இருப்பதால் கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கள்ளப்பட்டி (பீடர்) உயர்மின் அழுத்த பாதை பகுதிகளான வெங்கலம், வெங்கனூர், உடும்பியம், பெரியம்மாபாளையம், கள்ளப்பட்டி ஆகிய ஊர்களில் இன்று(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்வினியோகம் இருக்காது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story