பெரம்பலூர் மாவட்ட கபடி அணிக்கான வீரர்கள் தேர்வு
மாநில அளவிலான கபடி போட்டிக்கு பெரம்பலூர் மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பெரம்பலூர்:
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் 68-வது சீனியர் ஆண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டி வருகிற 18-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பெரம்பலூர் மாவட்டம் சார்பாக பங்கேற்க உள்ள கபடி அணிக்கான வீரர்கள் தேர்வு, பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கபடி வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கபடி போட்டி நடத்தப்பட்டது. அதில் அவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் முதற்கட்டமாக 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில் தேர்வாகும் 12 வீரர்கள் மாநில அளவில் நடைபெறும் கபடி போட்டியில் பெரம்பலூர் மாவட்ட அணிக்காக விளையாட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் தலைவர் முகுந்தன், செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story