பள்ளி மாணவிகளிடம் ஈவ்டீசிங் செய்த வாலிபர்கள் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
நிந்திரவிளையில் பள்ளி மாணவிகளிடம் ஈவ்டீசிங் செய்த வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கொல்லங்கோடு,
நிந்திரவிளையில் பள்ளி மாணவிகளிடம் ஈவ்டீசிங் செய்த வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மாணவிகளிடம் ஈவ்டீசிங்
நித்திரவிளை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் உள்பட சுமார் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் பயிலும் மாணவிகள் பள்ளிக்கு வரும் போது, வீட்டுக்கு செல்லும் போதும் சில வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வலம் வந்து ஈவ்டீசிங் செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த பின்பு அதன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்
இந்த நிலையில் நித்திரவிளை பகுதியில் நேற்று மாலையில் மாணவிகள் பள்ளி முடித்து வீட்டிற்கு செல்லும்போது சில வாலிபர்கள் ஆடம்பர விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் மாணவிகளின் முன் சாகச பயணம் செய்து அச்சுறுத்தி ஈவ்டீசிங் செய்தனர். இதனை கண்டு மாணவிகள் அச்சமடைந்து சத்தம் போட்டனர்.
உடனே, அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் அவர்களின் பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளி மாணவிகளை பாதுகாக்கும் வகையில் போலீசார் காலை, மாலை நேரங்களில் ரோந்து செல்ல வேண்டும் என்றும், ஈவ்டீசிங்கில் ஈடுபடும் வாலிபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story