ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி


ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
x
தினத்தந்தி 12 March 2022 2:04 AM IST (Updated: 12 March 2022 2:04 AM IST)
t-max-icont-min-icon

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்தான்.

கீழப்பழுவூர்:

பள்ளிக்கு சென்றான்
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள காணிக்கைபுரம் கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் வேளாங்கண்ணி. இவரது மகன் அபிஷேக்(வயது 9), கோக்குடி கிராமத்தில் உள்ள புனித இஞ்ஞாசியார் தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான். நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற அபிஷேக், மதிய இடைவேளையில் சாப்பிட்டுள்ளான். பின்னர் அவனும், அவனது நண்பனான அப்பள்ளி மாணவனும் இயற்கை உபாதை கழிக்க அருகே உள்ள ஏரிக்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு கால் கழுவ ஏரியில் இறங்கியபோது கால் வழுக்கி விழுந்த அபிஷேக் தண்ணீரில் மூழ்கினான்.
சாவு
இதை பார்த்த அவனது நண்பன் கூச்சலிடவே அருகே இருந்தவர்கள் ஓடிவந்து, ஏரிக்குள் இறங்கி அபிஷேக்கை தேடினர். சிறிது நேர தேடலுக்கு பின்னர் ஏரியில் இருந்து அபிஷேக்கை பிணமாக மீட்டனர். அவனுக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story