தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 12 March 2022 2:12 AM IST (Updated: 12 March 2022 2:12 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தான குழி 
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா ஆண்டகளூர் கேட் பஸ் நிறுத்தம் அருகில் வயர் பதிப்பதற்காக குழி தோண்டப்பட்டு மாதக்கணக்கில் மூடாமல் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த குழியை மூட வேண்டும்.
-கலையரசு, ராசிபுரம்.
ஆபத்தான மின்கம்பம் 
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் மாரிசெட்டி அள்ளியை அடுத்த பாறையூர் கிராமத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இந்த மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிதாக மின்கம்பம் நட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், பாறையூர், கிருஷ்ணகிரி.
சாலை அகலப்படுத்தப்படுமா?
கிருஷ்ணகிரி டோல்கேட்டில் இருந்து பஸ் நிலைய இடதுபுறம் சர்வீஸ் சாலையில் பஸ்கள் செல்லும் வழியில் லாரி பட்டறைகள் உள்ளன. இதனால் சாலையோரம் ஏராளமான லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. பஸ் நிலையத்தில் இருந்து டோல்கேட் நோக்கி வரும் வாகனங்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை ஆய்வு செய்து அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சூர்யா, தளிரோடு, ஓசூர்.
நிழற்கூடம் வேண்டும்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா அண்ணாசிலை அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் இல்லை. இதனால் மக்கள் வெயிலில் நிற்க வேண்டிய உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் நிழற்கூடம் அமைத்து தர வேண்டும்.
-சிங்காரம், வெண்ணந்தூர், நாமக்கல்.
நோய் பரவும் அபாயம்
சேலம் 53-வது வார்டுக்கு உட்பட்ட நாகப்பன் மெயின் ரோடு பகுதியில் நீண்ட நாட்களாக சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் சாக்கடைநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுபற்றி  பலமுறை புகார் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வாரி தூய்மையாக வைக்க வேண்டும்.
-ஊர்மக்கள், 53-வது வார்டு, சேலம்.
வேகத்தடை வேண்டும்
நாமக்கல் மாவட்டம் களங்காணியில் இருந்து காரைக்குறிச்சி புதூர் வரை ரெயில்வே மேம்பாலம்- மெயின் ரோடு சந்திக்கும் 4 ரோடு உள்ளது. இந்த 4 முனை சந்திப்பில் வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த பகுதியில் வேகத்தடைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமசாமி, நாமக்கல்.

Related Tags :
Next Story