மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி


மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி
x
தினத்தந்தி 11 March 2022 8:43 PM (Updated: 11 March 2022 8:43 PM)
t-max-icont-min-icon

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் சேலத்தில் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

சேலம்:-
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் சேலத்தில் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
விளையாட்டு போட்டிகள்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் விடுதிகளில் தங்கி படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கலைத்திருவிழா நேற்று சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தனி தாசில்தார் ஜாகீர்உசேன் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். விடுதி காப்பாளர் மகாலிங்கம் வரவேற்று பேசினார்.
முதலில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடைபெற்றன. பின்னர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் போட்டிகள் நடந்தன. 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 10 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஒரு பிரிவாகவும் என 2 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் தனியாக நடைபெற்றது.
பரிசளிப்பு விழா
இந்த விளையாட்டு போட்டிகளில் மாவட்டத்தில் விடுதிகளில் தங்கி படிக்கும் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு விரைவில் பரிசளிப்பு விழா நடைபெறும் என்றும், இதில் கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்க உள்ளார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story