அந்தியூர் அருகே மண் சரிந்து கட்டிட தொழிலாளி பலி; வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது பரிதாபம்


அந்தியூர் அருகே மண் சரிந்து கட்டிட தொழிலாளி பலி; வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது பரிதாபம்
x
தினத்தந்தி 12 March 2022 2:24 AM IST (Updated: 12 March 2022 2:24 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது மண் சரிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

அந்தியூர்
அந்தியூர் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது மண் சரிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். 
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கட்டிட தொழிலாளி
அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள ஊசிமலை கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 35). கட்டிட தொழிலாளி. 
இவருடைய மனைவி விஜயா. இவர்களுக்கு வேலு (17) என்ற மகனும், காவ்யா (12), பிரீத்தி (10) என்ற 2 மகள்களும் உள்ளனர். நாகராஜின் தாத்தா சன்னே கவுடர் என்பவர் அதே பகுதியில் வசித்து வருகிறார். 
மண் சரிவு
இந்த நிலையில் சன்னே கவுடருக்கு புதிதாக வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நாகராஜ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 2 பேர் உள்பட  3 பேர் அஸ்திவாரம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். 7 அடி தோண்டிய நிலையில் திடீரென மேல் பகுதியில் இருந்து மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அஸ்திவார குழிக்குள் நின்று கொண்டிருந்த நாகராஜ் மீது மண் மற்றும் கற்கள் விழுந்து அமுக்க தொடங்கியது. இதில் இருந்து அவரால் மீண்டு வெளியேறி வரமுடியில்லை. மேலும் அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றனர் ஆனால் முடியவில்லை.
சாவு
கண் இமைக்கும் நேரத்தில் மண் மற்றும் கற்கள் அமுக்கியதால் அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அறிந்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் இணைந்து மண்ணில் புதைந்த நாகராஜை மீட்டனர். பின்னர் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story