பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் எப்போது- தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா பதில்


பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் எப்போது- தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா பதில்
x
தினத்தந்தி 12 March 2022 2:30 AM IST (Updated: 12 March 2022 2:30 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் எப்போது என்பது குறித்து தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா பதில் தெரிவித்துள்ளார்

பெங்களூரு:
பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ்குப்தா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. பட்ஜெட் அளவு என்ன என்பது தற்போது பகிரங்கமாக கூற முடியாது. 

ஆனால் ஊழியர்கள் சம்பளம், செலவுகளை கவனத்தில் வைத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மேலும் முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தப்படும். அதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு கவுரவ்குப்தா கூறினார்.

Next Story