கீழ்பவானி வடிநிலக்கோட்ட சங்கங்களுக்கு தலைவர், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் தேர்தல்; மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் தலைமையில் கூட்டம்

கீழ்பவானி வடிநிலக்கோட்ட சங்கங்களுக்கு தலைவர், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் தேர்தல்; மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் தலைமையில் கூட்டம்
x
தினத்தந்தி 12 March 2022 3:12 AM IST (Updated: 12 March 2022 3:12 AM IST)
t-max-icont-min-icon

கீழ்பவானி வடிநிலக்கோட்ட சங்கங்களுக்கான தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடத்துவது தொடர்பாக மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஈரோடு
கீழ்பவானி வடிநிலக்கோட்ட சங்கங்களுக்கான தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடத்துவது தொடர்பாக மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
வடிநிலகோட்ட சங்கங்களுக்கு தேர்தல்
ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வடிநில கோட்டம் மற்றும் பவானிசாகர் அணைக்கோட்டங்களுக்கு உள்பட்ட நீரை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.
தமிழ்நாடு 2003-ம் ஆண்டு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்ட தேர்தல் விதிகளின்படி இந்த தேர்தல் நடைபெற உள்ளது.
ஆலோசனை கூட்டம்
இதற்கான நடவடிக்கைகளை தொடங்க ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டு உள்ளார். அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி டாக்டர் ப.முருகேசன் தலைமையில் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் செயற்பொறியாளர்கள் கண்ணன் (கீழ்பவானி வடிநிலக்கோட்டம்), வே.தாமோதரன் (பவானிசாகர் அணைக்கோட்டம்), கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி, ஈரோடு கோட்டாட்சியர் அலுவலக தாசில்தார் சங்கர் மற்றும் பாசன கோட்டங்கள் தொடர்புடைய அதிகாரிகள் பங்கேற்றனர்.

Next Story