பெங்களூருவில் வணிக வளாகங்கள் ரூ.70 கோடி சொத்துவரி பாக்கி-பசவராஜ் பொம்மை
பெங்களூருவில் வணிக வளாகங்கள் ரூ.70 கோடி சொத்துவரி பாக்கி உள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்
பெங்களூரு:
கர்நாடக மேல்-சபையில் நேற்று பா.ஜனதா உறுப்பினர் ரவிக்குமார் கேட்ட கேள்விக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 43 வணிக வளாகங்கள் உள்ளன. வணிக வளாகங்களிடம் இருந்து நிலுவையில் இருக்கும் சொத்துவரியில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.160 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் 9 வணிக வளாகங்கள் பெங்களூரு மாநகராட்சிக்கு ரூ.70 கோடி சொத்துவரி பாக்கி வைத்துள்ளன.
இந்த சொத்துவரி பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வணிக வளாகங்களுக்கு நோட்டீசு அனுப்பப்படுகிறது. அவர்கள் சொத்து வரியை செலுத்த தவறினால் அவர்களின் கட்டிடத்தை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story