தி.மு.க.-பா.ஜனதாவினர் மோதல்; 4 பேர் காயம்
கடையநல்லூரில் தி.மு.க., பா.ஜனதாவினர் இடையே நடந்த மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர்.
கடையநல்லூர்,
கடையநல்லூர் யூனியன் நெடுவயல் பஞ்சாயத்தில் தலைவராக முப்பிடாதியும், செயலாளராக கணபதியும் உள்ளனர். பா.ஜனதா பிரமுகரான முப்பிடாதி தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து இடையூறு செய்ததாக கணபதி அளித்த புகாரின்பேரில், கடையநல்லூர் போலீசார் முப்பிடாதி, அவருடைய மகன் மாரியப்பன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் முப்பிடாதிக்கு ஆதரவாக பா.ஜனதாவினர் நேற்று கடையநல்லூர் யூனியன் அலுவலகத்தில் முறையிட வந்தனர். அப்போது அங்கு வந்த தி.மு.க.வினருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் காயமடைந்த இருதரப்பைச் சேர்ந்த 4 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதனை கண்டித்து பா.ஜனதாவினர் கடையநல்லூர் யூனியன் அலுவலகம் முன்பும், போலீஸ் நிலையம் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story