திருமண வரவேற்பு நடந்த ஒரு வாரத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


திருமண வரவேற்பு நடந்த ஒரு வாரத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 March 2022 4:40 AM IST (Updated: 12 March 2022 4:40 AM IST)
t-max-icont-min-icon

திருமண வரவேற்பு நடந்த ஒரு வாரத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.

திரு.வி.க. நகர்,

சென்னை கொரட்டூர் அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் சந்தியா (வயது 22). பட்டதாரியான இவரும், உறவுக்காரரான ராஜா என்பவரும் 2020-ம் ஆண்டு மே மாதம் வில்லிவாக்கத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் ரகசியமாக பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும் தெரிகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உறவினர்கள் முன்னிலையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தநிலையில் சந்தியா, தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மற்றும் அக்கம் பக்கத்தினர் சந்தியாவை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தியாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

Next Story