மத்தூர் அருகே கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர்கள் 2 பேர் கைது
மத்தூர் அருகே கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக டிரைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் கருங்கல்பட்டி பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரி மற்றும் சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 140 மூட்டைகளில் 7 டன் ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு கடத்தியது தெரிந்தது. இதையடுத்து டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம், அந்தியூர் பகுதியை சேர்ந்த அருள் (வயது 47), வெங்கடேசன் (45) என்பதும் திருப்பத்தூர் பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை கர்நாடகா கடத்தி சென்றதும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வேன், மினிவேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story