பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு இனி போலீஸ் நிலையம் செல்ல தேவையில்லை மும்பை போலீஸ் கமிஷனர் அறிவிப்பு
மும்பையில் பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு பொது மக்கள் இனிமேல் போலீஸ் நிலையம் செல்ல தேவையில்லை என மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே அறிவித்து உள்ளார்.
மும்பை,
பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு பொது மக்கள் இனிமேல் போலீஸ் நிலையம் செல்ல தேவையில்லை என மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே அறிவித்து உள்ளார்.
பாஸ்போர்ட் சரிபார்ப்பு
இதுதொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
ஆவணங்கள் சரியில்லாமல் இருத்தல் போன்ற சில காரணங்கள் தவிர்த்து பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு பொது மக்களை இனிமேல் போலீஸ் நிலையத்துக்கு அழைக்க வேண்டாம் என முடிவு செய்து உள்ளோம். இதுமுறையாக பின்பற்றப்படவில்லையென்றால் புகார் அளிக்கவும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வீட்டுக்கு போலீஸ்
போலீஸ் கமிஷனரின் இந்த அறிவிப்புக்கு பொது மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
இதேபோல பொது மக்கள் போலீஸ் நிலையம் செல்லாமல் பாஸ்போர்ட்டை எப்படி சரிபார்க்க முடியும் என ஒருவர் கேட்ட கேள்விக்கு, போலீஸ்காரர் உங்களின் வீட்டுக்கு வந்து பாஸ்போர்ட்டை சரிபார்ப்பார் எனவும், அப்போது சந்தேகத்துக்கு இடமாக எதுவும் இருந்தால் மட்டும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவரை போலீஸ்நிலையத்துக்கு அழைப்பார் எனவும் பதில் அளித்து உள்ளார்.
----
Related Tags :
Next Story