அரசு பஸ்சை சிறை பிடித்து மாணவ மாணவிகள் போராட்டம்
சத்துணவு அமைப்பாளரை மாற்றக்கோரி அரசு பஸ்சை சிறை பிடித்து பள்ளி மாணவ மாணவிகளும், பெற்றோரும் சேர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆற்காடு
சத்துணவு அமைப்பாளரை மாற்றக்கோரி அரசு பஸ்சை சிறை பிடித்து பள்ளி மாணவ மாணவிகளும், பெற்றோரும் சேர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்து வேறுபாடு
ஆற்காட்டை அடுத்த புங்கனூர் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
சத்துணவு அமைப்பாளராக போதம்மாள் மற்றும் 2 சமையலர்கள் வேலை பார்த்து வருகின்றனர். பள்ளியில் ஆசிரியராக கிருஷ்ணமூர்த்தி என்பவரும் பணியாற்றி வருகிறார்.
அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இதனால் அடிக்கடி பள்ளியில் பிரச்சினை ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
சத்துணவு அமைப்பாளரை மாற்றக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர், ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தி உள்ளனர்.
சாலை மறியல்
இந்தநிலையில் இன்று காலை புங்கனூர் கிராமத்தில் பள்ளிக்கு அருகில் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் சேர்ந்து அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ்சை சிறைபிடித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சத்துணவு அமைப்பாளரை மாற்ற ேவண்டும், எனக் கோரிக்ைக விடுத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரசு தரப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அம்பேத்கர் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்ததும் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story