விபத்து முன் எச்சரிக்கை பலகைகள்
வாணியம்பாடி அருகே விபத்து முன் எச்சரிக்கை பலகைகள்
வாணியம்பாடி
வாணியம்பாடி சரக போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் விபத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, கருணாமூர்த்தி ஆகியோர்
அம்பலூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அம்பலூர், கே.கே.நகர், செந்தமிழ் நகர், எக்லாஸ்புரம், மல்லகுண்டா சாலை, வடக்குப்பட்டு, சிக்கினாங்குப்பம், அழிஞ்சிகுளம், தும்பேரி ஆகிய இடங்களில் விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் 15 இடங்களில் முன்னெச்சரிக்கை தகவல் பலகைகள் அம்பலூர் போலீஸ் நிலையம் சார்பாக அமைத்தனர்.
Related Tags :
Next Story