முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்


முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 12 March 2022 5:24 PM IST (Updated: 12 March 2022 5:24 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 16-ந்தேதி மாலை 3 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடக்க உள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அவர்தம் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் படைவிலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் மனுக்கள் ஆகியவற்றின் இரண்டு நகல்களுடன் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து குறைகளை தெரிவித்து பயனடையலாம். 

இந்தத் தகவலை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Next Story