விவசாயிகளுக்கு வேளாண்மை உபகரணங்கள்
விவசாயிகளுக்கு வேளாண்மை உபகரணங்கள்
குடியாத்தம்
குடியாத்தம் வட்டார வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண்மை உபகரணங்கள் மற்றும் தென்னங்கன்றுகள், பண்ணை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குடியாத்தம் உதவி வேளாண்மை இயக்குனர் ஆர்.உமாசங்கர் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் கே.கே.வி.அருண்முரளி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் நத்தம்பிரதீஷ், முரளிதரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மம்தாஇமகிரிபாபு, ஜெயபாரதிமணவாளன், ஒன்றிய குழு உறுப்பினர் பிரகாசம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்
வேளாண்மை அலுவலர் ஆர்.அன்பழகன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் கலந்துகொண்டு ஒரு விவசாயிக்கு மானிய விலையில் ரோட்டாவேட்டர் கருவியும், விவசாயிகளுக்கு மானிய விலையில் 2500 தென்னங்கன்றுகளையும், தார்பாய்கள், விவசாய பண்ணை கருவிகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் இ.ஜெசிந்தா, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வேளாண்மை அதிகாரிகள் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி விதை அலுவலர் வி.ஜெயக்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story