போலீசில் காட்டி கொடுத்ததாக பெண்ணை நிர்வாணமாக்கி சித்ரவதை - 6 பேர் கைது


போலீசில் காட்டி கொடுத்ததாக பெண்ணை நிர்வாணமாக்கி சித்ரவதை - 6 பேர் கைது
x
தினத்தந்தி 12 March 2022 6:04 PM IST (Updated: 12 March 2022 6:04 PM IST)
t-max-icont-min-icon

மணலியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசில் காட்டி கொடுத்த பெண்ணை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர்,  

மணலியை சேர்ந்த 52 வயது பெண், அந்த பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 6 பேர் கொண்ட கும்பல் நள்ளிரவில் அந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவரை ஆட்டோவில் கடத்தி சென்றனர். பின்னர் சின்னசேக்காடு பகுதியில் உள்ள வீட்டில் அந்த பெண்ணை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்தனர். மறுநாள் மாலையில் விடுவித்தனர். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் ரமேஷ், பார்த்திபன், அன்பழகன், சரத்குமார், முருகன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.

Next Story