கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்


கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 12 March 2022 6:20 PM IST (Updated: 12 March 2022 6:20 PM IST)
t-max-icont-min-icon

கிராம ஊராட்சி செயலாளர்களுக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்று, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருவாரூர்;
கிராம ஊராட்சி செயலாளர்களுக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்று, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க கூட்டம்
திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட கூட்டம்  நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வசந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட துணைத்தலைவர் வாசுதேவன், மாவட்ட இணை செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ரமேஷ், மாநில பொருளாளர் விஜயபாஸ்கர், மாநில செயலாளர் சவுந்தரபாண்டியன், முன்னாள் மாநில துணைத்தலைவர் புஷ்பநாதன், மாவட்ட பொருளாளர் சிவக்குமார், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருவூலம் மூலம் ஊதியம்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு
100 நாள் வேலை திட்ட கணினி உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் நிர்ணயம் செய்து பணி வரன்முறை செய்ய வேண்டும். முழு சுகாதார திட்ட வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு காலமுறை ஊதியம், பணி வரன்முறை செய்ய வேண்டும். கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். மேலும் அரசு ஊழியர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் வழங்க ஊராட்சி செயலாளருக்கு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினர் ராஜசேகரன் வரவேற்றார். முடிவில் மாவட்ட இணை செயலாளர் மோகன் நன்றி கூறினார்.


Next Story